Friday, November 15, 2013

மூலிகை குடிநீர் - சுக்கு காபி - Dry ginger coffee



Healthy Indian drink instead of  Tea or Coffe.

மூலிகை குடிநீர் (சுக்கு காபி)


சுக்கு கஷாயம் 


சுக்கைத் தட்டிப் போட்டு கஷாயம் போல கொதிக்க வைத்து
பவுடர் தயாரிப்பு:

சுக்கு(dryginger)(Hindi-SONTH), கொத்தமல்லி(Coriander seed), சீரகம் (cumin seed) மூன்றும் முக்கிய பொருட்கள். சுக்கு, சீரகம் ஒரு மடங்கு எடை. அவரவர் ருசிக்கேற்ப அளவுகளை மாற்றலாம்.
பூக்கள், வேர்கள், பட்டைகள், வாசனைப் பொருள்கள், என விரும்பிய எதுவும் சேர்க்கலாம்.

ஒரு டம்ளர் தயாரிக்க

ஒரு டம்ளர் நீரில் அரை ஸ்பூன் தூளும், இரு ஸ்பூன் கரும்புச் சர்க்கரையும், (நாட்டுச் சர்க்கரை/ பழுப்பு சர்க்கரை/ கருப்பட்டி/ வெல்லம்) போட்டு நன்கு கொதிக்கவிட்டு இறக்கி மூடி வைத்து நன்கு ஆறின பின்பு வடிக்கட்டி சாப்பிடலாம்.
காலை, மாலை மற்றும் இரவு உணவிற்கு முன் / பின் என எந்த நேரமும் சாப்பிடலாம்.
டீ, காபி, பால் மற்றும் விலை மிக்க பாட்டில் / டின் பானங்கள் போன்றவற்றிற்கு சிறந்த மாற்று பானாமாகும். அதன் கெடுதல் இதில் இல்லை. குழந்தைகள் முதல் பெரியோர் வரை சாப்பிடலாம்.
  • செரிமான குறைவு, பசியின்மை, மந்தம், வாயு, மலச்சிக்கல், சளி-ஆஸ்துமா, சர்க்கரை, சோம்பல் போன்றவற்றிற்கு பலனளிக்கும்.
  • அற்புத முதலுதவி மருந்து நெஞ்சு வலி, இருதய தாக்கு, மூட்டு வலி, வயிற்று பொருமல், ஆஸ்துமா, வாயுதொல்லை போன்ற அனைத்து நோய்களுக்கும் இது சிறந்த முதலுதவி பானமாகும்
தொகுப்பு: ச.குஞ்சிதபாதம், கும்பகோணம் வட்டம், 612401 போன்:0435-2427342
Compiled by L.Ramachandran,